அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள்

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வெற்றியடைய

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர் மன்றம் சார்பில்  கும்பகோணம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. 
மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் உதயநிதி,  மாவட்ட பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், நோயாளிகளுக்கு தேவையான கட்டில்,  மெத்தை,  பாய், தலையணை மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரட், பால், பிஸ்கட் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர செயலாளர் தமிழழகன் ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆசைதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com