கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா போட்டிகள்: இன்று பரிசளிப்பு விழா

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான புஷ்பமாலா

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான புஷ்பமாலா என்கிற கலை விழா போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கல்லூரியில் புஷ்பமாலா என்கிற கலை விழா போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. தொடக்க நாளில் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டிகளைக் கல்லூரி முதல்வர் ஆர். வெங்கடாசலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தேர்வு நெறியாளர் கோ. கரிகாலன், அறிவியல் புலத்தலைவர் வி.எஸ். நாகரத்தினம், அலுவலக மேலாளர் எஸ். துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.  இப்போட்டிகளில் 20 கல்லூரிகள், 3 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 285 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதில், கர்நாடக இசை, மெல்லிசை, குழு இசை, கருவி இசை, பரதநாட்டியம், குழு நடனம், மேற்கத்திய நடனம், பல குரல், நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன. விழாவில் கவின் கலை மன்றத் துணைத் தலைவர் சிவாஜி கபிலன், ஒருங்கிணைப்பாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com