ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில்

தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தஞ்சாவூர் சரகத் துணைப் போக்குவரத்து ஆணையர் செ. உதயகுமார் தெரிவித்திருப்பது:
ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் பகுதி அலுவலகங்களான பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, சீர்காழி, அறந்தாங்கி, இலுப்பூர், ஆலங்குடி ஆகிய அலுவலகங்களில் இத்திட்டம் வெள்ளிக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இப்புதிய திட்டத்தின் மூலம் ஒருவர் உரிமத்துக்கான பதிவு செய்து அல்லது தேர்ச்சி பெற்ற அன்றைய நாளே ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச் சான்றைப் பெற்றுக் கொள்ள முடியும். போலி ஓட்டுநர் உரிமமோ அல்லது பதிவுச் சான்றோ தயார் செய்ய முடியாது. ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றில் விவரங்கள் உடனடியாகவும், மிகவும் எளிதாகவும் கணினியில் அறிய முடியும்.
முன்பு பயன்பாட்டில் இருந்த பதிவுச்சான்று போல இல்லாமல், ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுவதால், பொதுமக்கள் மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். 
ஒருவர் தன்னுடைய ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று விவரங்களை நாட்டின் எந்தப் பகுதியிலி இருந்து கொண்டும் கணினி மூலம் எளிதாகப் பார்வையிடலாம்.
மேலும், அலுவலகப் பணியாளர்களின் பணிச் சுமை மற்றும் நேரம் விரயமாகாமல் விரைவாக பணிகள் முடிக்க நண்பகல் 12 மணிக்குள் ஓட்டுநர் உரிமம் தேர்வு,  உரிமம் புதுப்பித்தல், புதிய வாகனப் பதிவு ஆய்வு ஆகியவை முடிக்கும் வகையில் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com