சேதுபாவாசத்திரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்

கஜா புயல் தாக்கி 100 நாள்கள் ஆன நிலையில் மீனவச் சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி,  சேதுபாவாசத்திரம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள்  விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கஜா புயல் தாக்கி 100 நாள்கள் ஆன நிலையில் மீனவச் சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி,  சேதுபாவாசத்திரம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள்  விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2018, நவம்பர் 16 ஆம்தேதி கஜா புயல் தாக்கியதில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் ,சேதுபாவாசத்திரம்  மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  நாட்டுப்படகுகள், விசைப்படகுகள், பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. இதனால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், மூன்று மாதங்களாக வேலையிழந்தும் அவதியுற்று வந்தனர்.
188 படகுகள் முழுமையாக சேதம் :  மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளிலிருந்த 247 விசைப் படகுகளில், 54 படகுகள் பகுதியாகவும், 188 படகுகள் முழுமையாகவும் சேதமடைந்தன. 
முழுமையாக மற்றும் பகுதியாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கு  முறையே ரூ.5 லட்சம், 3 லட்சம் என நிவாரணத் தொகையை அரசு அறிவித்தது. பகுதி சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்கள்   பெரும்பாலானோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  சில விசைப்படகு மீனவர்கள் தங்கள் சொந்த பணத்தையும் சேர்த்து செலவிட்டு, படகுகளைப் பழுதுநீக்கி மீன்பிடித் தொழில் செய்யத் தயாராகிவிட்டனர்.  
முழுமையாக சேதமடைந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணப் பணம் இதுவரை வழங்கப்படவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள்- மீனவர்களின் கூட்டு வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்படும் போன்ற நிபந்தனைகளை ஏற்க மறுத்த மீனவர் சங்கங்களைச் சேர்ந்தோர், அரசு அறிவித்த தொகையைக் கொண்டு பழைய படகுகூட வாங்க முடியாது.  எனவே இழப்பீட்டுத்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படவில்லை. எனவே நிவாரணம் உயர்த்தி  வழங்கும்  வரை அனைத்து விசைப்படகு மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர் சங்கம்  முடிவெடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்வளத்துறை அனுமதிச் சீட்டு பெற்று, சனிக்கிழமை காலை  7 விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். 
மீன்வளத்துறை ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் கடலோர காவல்படை ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவல்துறையினர்,  மற்றும் அதிகாரிகள் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் கடலுக்குள் செல்லவிருந்த படகுகளில் ஏறி பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா, அனுமதி சீட்டு பெற்றுள்ளனரா, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் உள்ளனவா என ஆய்வு செய்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com