பொலிவுறு நகரத் திட்டம்ரூ. 454.86 கோடியில் பணிகள் தொடக்கம்

தஞ்சாவூர் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டத்துக்காக ரூ. 454.86 கோடி மதிப்பிலான பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


தஞ்சாவூர் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டத்துக்காக ரூ. 454.86 கோடி மதிப்பிலான பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்தில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைக்கண்ணு,  பின்னர் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளை பொலிவுறு நகரமாக்குவதற்குப் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தஞ்சாவூர் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ. 191.74 கோடியிலும், புதை சாக்கடை திட்டம் ரூ. 93.68 கோடியிலும், ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டு மேம்பாட்டுப் பணி ரூ. 4 கோடியிலும், சிவகங்கை பூங்கா சீரமைப்பு ரூ. 8.10 கோடியிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
 பழைய பேருந்து நிலைய மேம்பாடு ரூ. 14.88 கோடியிலும், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலைய மேம்பாடு ரூ. 13.85 கோடியிலும், அரசுக் கட்டடங்களின் மேல் பகுதியில் சூரிய ஒளி மின் தகடு பொருத்துதல் ரூ. 2.21 கோடியிலும், உயிரி சுரங்கம் ரூ. 15.43 கோடியிலும், குளங்கள் பாதுகாப்பு ரூ. 10.25 கோடியிலும், காமராஜர் சந்தை மேம்பாடு ரூ. 17.47 கோடியிலும், சரபோஜி சந்தை மேம்பாடு ரூ. 14.59 கோடியிலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெத்தன்னன் கலையரங்கத்தை திறந்தவெளி கலையரங்கமாக மாற்றுவதற்காக ரூ. 2.85 கோடியும், பொலிவுறு திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வளித்தலுக்காக ரூ. 40 கோடியும், 51 அங்கன்வாடிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 48 லட்சமும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக ரூ. 2.58 கோடியும்,  திடக்கழிவு மேலாண்மை, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இடம் அமைப்பதற்காக ரூ. 10.50 கோடியும், தகவல் தொழில்நுட்ப அமைப்புக்கான கட்டடம் அமைப்பதற்காக ரூ. 4.95 கோடியும், தெரு விளக்கை பொலிவுறு விளக்காக மாற்றுவதற்கு ரூ. 7.30 கோடியும் என மொத்தம் 18 பணிகள் ரூ. 454.86 கோடி மதிப்பில் பொலிவுறு நகரமாக மாற்றப்படவுள்ளது. 
இப்பணிகள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்  அமைச்சர்.
மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், மாநகராட்சி ஆணையர் (பொ) ப. காளிமுத்து உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com