தஞ்சாவூர்

பொங்கல் திருவிழா

DIN

பாபநாசம் வழக்குரைஞர்கள்  சங்கம் சார்பில்...

பாபநாசம் வழக்குரைஞர்கள் சங்க  வளாகத்தில் சங்கம் சார்பில் அம்மையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு சங்கத் தலைவர் என். பாஸ்கரன்  தலைமை வதித்தார். விழாவில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எஸ். ராஜசேகர்,  பாபநாசம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடக்கி வைத்தனர். விழாவில் பொங்கலிட்டு, அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் வழக்குரைஞர்கள் இளையராஜா,  கார்த்தி, முத்தப்பா, சதீஷ், ரகுபதி, காவல் ஆய்வாளர்கள் செங்குட்டுவன், ரமேஷ், நாகரெத்தினம், வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ சட்ட பணியாளர்கள் எஸ்.பி.ராஜேந்திரன்,  எஸ்.தனசேகரன் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க செயலாளர் ஜெயகுமார் வரவேற்றார். நிறைவில் சங்க பொருளாளர் எஸ். பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

யாகப்பா பள்ளியில்...
தஞ்சாவூர் யாகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி, யாகப்பா பன்னாட்டுப் பள்ளியில் பொங்கல் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
இதில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். மேலும், கும்மியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள், கிராமியப் பாடல்கள், சிறு நாடகங்கள் நடைபெற்றன. பொங்கல் தயாரிக்கும் போட்டி, கோலப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பெற்றோர்களுக்குக் கயிறு இழுத்தல், உரி அடித்தல், கோலப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வரலாறு மற்றும் புவியியல் பேராசிரியர்களான ஜெரால்டு, ஏனெப், ஓலிவியா, பிரான்ஸ்வாஸ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
விழாவில் பள்ளி அறங்காவலர் மேரி ஞானம், தாளாளர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், கெய்சர் அருள் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏனாதியில்...
பட்டுக்கோட்டையை அடுத்த ஏனாதி கிழக்கு கிராமத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, ரூ.25,000 திட்ட மதிப்பீட்டில் அதே ஊரைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் 2 பேருக்கு தலா 1 பசுக்கன்று, நலிவடைந்த மக்கள் 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, துணிப்பை, பிளாஸ்டிக் குடம், போர்வை, பாய், எவர்சில்வர் தட்டு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராம் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ஏனாதி சி.மதன் முன்னிலை வகித்தார். இயக்க நிர்வாகிகள், கிராம மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT