பிப். 23-இல் மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கம்

தஞ்சாவூரில் பிப். 23-ம் தேதி மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்துவது என அனைத்து இடதுசாரிகள் பொது மேடை அமைப்பு முடிவு செய்துள்ளது.


தஞ்சாவூரில் பிப். 23-ம் தேதி மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்துவது என அனைத்து இடதுசாரிகள் பொது மேடை அமைப்பு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூரில் மத வெறி பாசிச எதிர்ப்பு கருத்தரங்கத்தை பிப். 23-ம் தேதி நடத்துவது, இதில் அனைத்து இடதுசாரி அமைப்புகளின் மாநிலத் தலைவர்களை அழைத்து பேசச் செய்வது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும். 
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திருவாரூரில் வெள்ளிக்கிழமை சைக்கிள் பேரணி சென்றவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். பொது பிரச்னைக்காக போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்துவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூரில் மே மாதம் செஞ்சட்டை பேரணியை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர். மனோகரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மகஇக மாநில இணைச் செயலர் காளியப்பன், இடதுசாரிகள் பொது மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், சிபிஎம்எல் (மக்கள் விடுதலை) மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், சிபிஎம்எல் (லிபரேசன்) ராஜன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி அருண்சோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com