உலக திருக்குறள் மைய கூட்டம்

பாபநாசத்தில் பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 260 ஆவது மாதாந்திர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 

பாபநாசத்தில் பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 260 ஆவது மாதாந்திர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தேசிய நல்லாசிரியர் எஸ். கலைச்செல்வன்  தலைமை வகித்தார். மைய செயலாளர் கு.ப. செயராமன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில்,  பேராசிரியர் கை. அறிவழகன் மாமழை போற்றுவோம், கும்பகோணம் ஆசிரியை சசி சிவராமன் ஈகையும் சேவையும், மு.பெரியசாமி இல்லலறமே நல்லறம், தி.விஜயகுமார் அன்பின் ஆற்றல் என்னும் தலைப்புகளில் பேசினர்.
இதில் ஓய்வு பெற்ற  மாவட்ட கருவூல அதிகாரிஅன்பழகன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ராஜசேகரன் செங்கமலம், அன்னை சாரதா மகளிர் மன்ற தலைவி தில்லை நாயகி, சுதா விஸ்வநாதன், ஆசிரியர் சங்கர், சங்க நிர்வாகி ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்,  மைய செயலாளர் கு.ப. செயராமன் 80 வயதை கடந்ததையொட்டியும், திருமணமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும் சங்க நிர்வாகிகள் கு.ப. செயராமனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். நிறைவில் சங்க இணை செயலாளர் குருசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com