தஞ்சாவூர்

நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் கிடைக்கும் 

DIN

நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் கிடைக்கும் என்றார் அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
அமமுக எதற்காகப் பதிவு செய்யப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், பொதுச் செயலர் தலைமையிலான எங்களது அணியைக் குறிப்பிட்டு அதிமுகவின் ஒரு அணி என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. நாங்கள் எங்களின் உரிமைக்காகப் போராடுகிறோம். இந்த அணிக்கு மார்ச் 25ஆம் தேதி நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் கிடைக்கும்.
இத்தேர்தலை மக்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது மே 23ஆம் தேதி தெரிந்துவிடும். பலமான கூட்டணி எனக் கூறியவர்கள் ஆர்.கே. நகரில் டெபாசிட்டை இழந்தனர். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அஞ்சினர். ஆர்.கே. நகர் தேர்தலில் முதல்வர் உள்பட 33 அமைச்சர்கள் தேர்தல் பணியாற்றினர். அவர்களை மக்கள் தோற்கடித்தனர். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் விதமாக அதிமுகவினர் துரோகக் கூட்டணியை அமைத்துள்ளனர். 
இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பர். மற்றொரு கூட்டணி மாபெரும் தோல்வி அடையும். 
கருத்துக்கணிப்புகள் பொய் என்பதை மக்கள் நிரூபிப்பர். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. எல்லாம் இத்தேர்தலுடன் முடிந்துவிடும். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மார்ச் 22ஆம் தேதி அறிவிக்கப்படுவர். பிரசாரம் மார்ச் 27ஆம் தேதி தொடங்கப்படும் என்றார் தினகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT