வேட்பாளர்களின் செலவினங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் செலவின பார்வையாளர் பேச்சு

வேட்பாளர்களின் செலவினங்களை அதிகாரிகள் முறையாக பதிவு செய்ய வேண்டும் என மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் செலவினங்களை அதிகாரிகள் முறையாக பதிவு செய்ய வேண்டும் என மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை  நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர்  வீராசாமி  தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாரதி,  ஆட்சியரின்
கணக்கு பிரிவு நேர்முக  உதவியாளர் விஜயலெட்சுமி, மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி  கோபி,  டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஏழுமலை மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்,  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் செலவினங்களுக்கான பார்வையாளர் சதீஷ் கலந்துகொண்டு பேசியதாவது:
வேட்பாளர்கள் செய்யும் செலவினங்கள், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், அதே கட்சியினர் அல்லது கூட்டணி கட்சியினர் செய்யும் தேர்தல் செலவு விவரங்களை அதிகாரிகள் முறையாக  ஆய்வு செய்து பதிவு செய்ய  வேண்டும்.
விதிமுறைகளை மீறி செலவு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த ஆவணங்களுடன் தேர்தல்  நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டிய பணிகளை கவனத்துடன் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com