அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க (ஜமாஅத்) புதிய நிர்வாகிகள் தேர்வு எம்.எம். சேக் அலாவுதீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தலைவராக என். முகமது ஜபருல்லா, செயலாளராக என்.எம். சேக்தாவூது, பொருளாளராக என். அபுபக்கர், துணைத் தலைவராக ஓ.சாகுல் ஹமீது, ஆலோசகர்களாக ஏ.முகமது முகைதீன், எம்.எம். சேக் அலாவுதீன், ஏ. அப்துல் ரஷீது, கே. முகமது ராவுத்தர், என். முகைதீன் மற்றும் 13 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.