திருப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காதவர்கள் புகார் அளிக்கலாம்

திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த வீ பூ  இந்தியா எண்டர்பிரைசஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து

திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த வீ பூ  இந்தியா எண்டர்பிரைசஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் வரப்பெறாதவர்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகேயுள்ள அம்மன்குடியைச் சேர்ந்தவர் ரூபேஷ். இவர் திருப்பூரைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வந்த  வீ பூ  இந்தியா எண்டர்பிரைசஸ் பி லிட் (ரங்ங்ண் க்ஷர்ர் ஐய்க்ண்ஹ ங்ய்ற்ங்ழ்ல்ழ்ண்ஸ்ரீங்ள் ல். ப்ற்க்) என்ற நிறுவனத்தில் மின்னணு பரிவர்த்தனை மூலம்  ரூ. 4,16, 650 முதலீடு செய்திருந்தார். 
தொகை முதிர்ச்சியடைந்த பின்னரும் உரிய பலன்களுடன் நிறுவனம் திருப்பித் தரவில்லை. இதுதொடர்பாக பலமுறை கேட்டும் பணம் கிடைக்காததால் அவர் திருச்சி, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார். 
அவரைப் போலவே 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
எனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் திருச்சி, காஜாமலை, அரபிக்கல்லூரி அருகிலுள்ள பல்துறை அலுவலக கட்டடத்தில் செயல்படும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com