டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சில்லரை விற்பனை தொகையை டாஸ்மாக் நிர்வாகமே தினந்தோறும் பெற்றுச் செல்ல வலியுறுத்தி

சில்லரை விற்பனை தொகையை டாஸ்மாக் நிர்வாகமே தினந்தோறும் பெற்றுச் செல்ல வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட பழைய ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைச் செயலர் பி. முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அமைப்புச் செயலர் எஸ். பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் என். கண்ணன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. பால்பாண்டியன் பேசியது:
டாஸ்மாக் மதுக்கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் மதுபானங்களுக்கான தொகையை கடையிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்துகிறது. 
ஆனால், உள்ளூர் காவல்துறையோ கடைகளில் பணம் வைத்திருந்தால் பாதுகாப்பு இருக்காது. எனவே, விற்பனையாளர்கள் அவரவர் வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டு மறுநாள் வங்கியில் செலுத்த நிர்பந்தம் செய்கின்றனர். 
இரவு பணி முடிந்து தொகையை எடுத்துச் செல்லும்போது வழிப்பறை கொள்ளையர்கள் பணத்தை திருடிச் சென்றால் அந்தத் தொகையை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், பொய் வழக்கு, காவல்துறை தாக்குலுக்கும் ஆளாக நேரிடுகிறது. 
திருச்சி மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்களால் டாஸ்மாக் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சென்னை மாநகரில் உள்ளதைப் போன்று அனைத்து மாவட்டங்களிலும் சில்லரை விற்பனை தொகையை அன்றாடம் டாஸ்மாக் நிர்வாகமே நேரில் கடைக்கு வந்து பெற்றுச் செல்ல வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், டாஸ்மாக் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com