1,500 மின் கம்பங்கள் சேதம்

கஜாபுயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 1500 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக

கஜாபுயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 1500 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக மணப்பாறை பகுதியில் மட்டும் 800 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளதாகவும்  திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அண்ணா மேலாண்மைப் பயிற்சி மைய இயக்குநரும் முதன்மைச் செயலருமான கே. பனீந்திரரெட்டி.
மாவட்டத்தில் கஜா புயால் ஏற்பட்ட சேதங்களை விரைவில் சரிசெய்வது குறித்தும், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தது:
கஜா புயலால் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துவரங்குறிச்சி, மருங்காபுரி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. மணப்பாறை பகுதியில் 800 மின் கம்பங்களும், மணிகண்டம் ஒன்றியத்தில் 300 மின் கம்பங்களும், இதரப் பகுதிகளில் 400 மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. 
மணப்பாறை பகுதியில் மின் கம்பங்களை சரி செய்ய ஏற்கெனவே 500 மின்கம்பங்கள்  தயார் நிலையில் உள்ளன. மேலும், தற்போது 600 மின் கம்பங்கள் திருச்சியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மணப்பாறை, மேட்டுப்பட்டி பகுதிகளில்தான் அதிகளவில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
அந்தநல்லூர், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் வாழைகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் 9 பசு மாடுகள், 1 காளை, 5 வெள்ளாடுகள் உயிரிழந்துள்ளன.இவற்றை கால்நடைத்துறையின் மூலமாக உடனடியாக பிரேத பரிசோதனை செய்துஉரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
மாநகராட்சிப் பகுதியில் 70 மரங்கள் விழுந்துள்ளன. 
இவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு  வருகின்றன என்றார் பனீந்திரரெட்டி.
ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது) சிவருத்ரயா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர்  கோ. மலர்விழி, வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ், சுகாதாரத் துறை இணை இயக்குநர் சம்சாத் பேகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.ராமகிருட்டிணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டபல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com