கஜா புயல் பாதிப்பு: வாழை, கரும்புக்கு அதிகளவில் இழப்பீடு வழங்க வேண்டும்

கஜா புயல் பாதிப்பால் திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்த வாழைக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சமும், கரும்புக்கு ரூ.50,000 மும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று


கஜா புயல் பாதிப்பால் திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்த வாழைக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சமும், கரும்புக்கு ரூ.50,000 மும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாநகர் மாவட்ட குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் : டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நோய் கண்டறிவதற்கான முகாம்கள் அமைக்க வேண்டும்.கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், தொட்டியம், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி வட்டாரங்களில் வாழைமரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதோடு நெல், கரும்பு போன்ற பயிர்கள், தென்னை மரங்கள் முறிந்தும் கடுமையான பாதிப்பை அளித்துள்ளன. பல கிராமங்களில் வீடுகளும் சேதமடைந்துள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாழை உள்ளிட்ட பயிர்கள், இடிந்த வீடுகள் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளுக்குப் பாதிப்புக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ராஜா மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com