கூட்டுறவு வார விழா மினி மாரத்தான்: ஏராளமானோர் பங்கேற்பு

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் ஏராளமானோ


அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் 65ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒரு மையக் கருத்தைக் கொண்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் ஒழிப்பு, கொசு ஒழிப்பு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது தொடர்பாகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மினி மாரத்தான் ஓட்டத்தை நடத்த கூட்டுறவுத் துறை முடிவு செய்திருந்தது. அதன்படி, திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் கல்லூரி மாணவிகள், பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மாரத்தானை தொடக்கி வைத்தார்.
தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் அண்ணாநகர்-நீதிமன்ற இணைப்புச் சாலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, மாநகராட்சி வளாகம், தலைமை அஞ்சல் அலுவலகம், புதுக்கோட்டை சாலை, குட்ஷெட் மேம்பாலம், சேதுராமன்பிள்ளை காலனி, டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் சென்ற அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாநகரக் காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வுகளில், திருச்சி மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் முனைவர் கே.சி. ரவிச்சந்திரன், ஆவின் பெருந்தலைவர் சி.கார்த்திகேயன், திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் மா. உமாமகேசுவரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com