திருச்சி

துர்காபூஜை: காவிரியாற்றில் சிலைகள் கரைப்பு

DIN

திருச்சி பெல் நகரியம், கைலாசபுரம் சர்வாஜென் அமைப்பின் சார்பில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் துர்காதேவி  உள்ளிட்ட 5 அம்மன், சுவாமிகளின் சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.
பெல் நகரியம் கைலாசபுரம் கிளப் சர்வாஜென் அமைப்பில் ஸ்ரீஸ்ரீ துர்காபூஜை கொண்டாட்டம் கடந்த 15 ஆம் தேதி  சஷ்டி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆரத்தியும் நடைபெற்றது.  இந்த நிகழ்வில், குழுவின் தலைவரும், பெல் பொது மேலாளருமான எல். கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் டி. அதாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மகா சப்தமி பூஜை,  மகா அஷ்டமி பூஜை, புஷ்பாஞ்சலி, ஆரத்தி, சாந்திபூஜையும்,ஆயுதபூஜை தினமான வியாழக்கிழமை மகா நவமி பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. மாலையில் ஆரத்தியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகவ்வாக மகாதசமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  காலையில் 9.52 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை இந்த பூஜை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பெல் நகரியம் கைலாசபுரத்தில் வைக்கப்பட்டிருந்த சிங்கவாகனத்தில் எழுந்தருளி அசுரனை வதம் செய்த கோலத்தில் அமர்ந்திருந்த துர்காதேவி,  லட்சுமி, சரசுவதி, விநாயகர், முருகன் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு வாகனத்தில் விசர்ஜனம் செய்வதற்காக காவிரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. வாகனங்களில் வைக்கப்பட்டிருந்தஇந்த சிலைகள் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றுப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர்,   முருகன், விநாயகர், சரசுவதி, லட்சுமி சிலைகளும், அதன் பின்னர் துர்காதேவி சிலையையும் காவிரியாற்றில் கரைத்தனர். பின்னர், விழாவில் பங்கேற்றவர்கள் மீதுபுனிதநீர் தெளிக்கப்பட்டது.
துர்காபூஜை கொண்டாட்டத்தில்  டால்மியா பொது மேலாளர் மூர்த்தி,   ஓ.என்.ஜி.சி.  முதன்மை நிதி அதிகாரி சோமன்ராய், பெல் பொது மேலாளர்கள் குருசந்திரன், ரகுராமன், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
துர்கா பூஜை விழா ஏற்பாடுகளை குழுவின் துணைத் தலைவர் டி. அதாக், செயலர்  பலாஸ் தோலோயி, பொருளாளர் ஜெய்தேப் பிஸ்வாஸ், இணைச் செயலர் குணால் சக்கரவர்த்தி, இணைப் பொருளாளர் பிமல் சௌத்ரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
துர்கா பூஜை கொண்டாட்டத்தையொட்டி விழாக் குழு மற்றும் ஓசிக் இன்ஸ்டியூட் சார்பில்ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் 225 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இவர்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT