வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

அண்ணா பல்கலைக்கழக கால்பந்து, பூப்பந்து: சமயபுரம், அரியலூர்  பொறியியல் கல்லூரிகள் வெற்றி

DIN | Published: 11th September 2018 09:17 AM

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கால்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகளில் சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ( அரியலூர்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
அண்ணா பல்கலைக்கழக 14 ஆவது மண்டலத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்துபோட்டி சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.  16 கல்லூரிகள்  பங்கேற்ற இப்போட்டியின் இறுதி போட்டியில், பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியை 4-2 என்ற கோல்கணக்கில் வென்று சமயபுரம் கே.ராமகிருஷ்ணன்பொறியியல் கல்லூரி  சாம்பியன்  பட்டத்தை கைப்பற்றியது.
சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியை 3-0 என்றகோல்கணக்கில் சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி வென்று மூன்றாமிடத்தைப் பிடித்தது.
பூப்பந்துப் போட்டி : திருச்சி மாவட்டம், கொணலையிலுள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் 14 ஆவது மண்டலத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான பூப்பந்துப் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 9 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி போட்டியில் சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியை 35-30, 35-29 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை அரியலூரிலுள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி கைப்பற்றியது.
இந்த வெற்றிகளின் மூலம் மண்டலங்களுக்கு இடையிலான கால்பந்து, பூப்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியும், அரியலூர் பொறியியல் கல்லூரியும் பெற்றன.

More from the section

துறையூர் நூலக வாசகர் வட்டத்துக்கு அரசு விருது
நூலக வாரவிழா
மகளிர் நீதிமன்ற அரசு வழக்குரைஞர் நீக்கம்
சாலை விபத்தில்  இளைஞர் சாவு
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்