புதன்கிழமை 14 நவம்பர் 2018

இரு சக்கர வாகனம் குழியில் விழுந்து தொழிலாளி சாவு

DIN | Published: 11th September 2018 09:17 AM

துறையூர் அருகே  கரிகாலி சாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்வராஜ்(34). இவர், இவருடைய சகோதர முறை உறவினர் சஞ்சீவி மகன் ராஜா(23) வின் புல்லட்டின் பின்னால் அமர்ந்து கீரம்பூரில் உள்ள உறவினரைப் பார்த்துவிட்டு ஞாயிறு இரவு ஊர் திரும்பினர். கண்ணனூர் பாளையம் தேவரப்பம்பட்டி இடையே கல்லுக்குடி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட  குழியில் இரு சக்கர வாகனம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெம்புநாதபுரம் போலீஸார் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

More from the section

அஞ்சல் ஊழியர்கள் தர்னா
மணல் விலையை ஒழுங்குபடுத்த வலியுறுத்தல்


மாநகர், புறநகர்ப் பகுதிகளில் நவ.17 இல் மின்தடை

மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100 பேர் கைது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு