வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்த முடிவு

DIN | Published: 11th September 2018 08:57 AM

எளிமையான முறையில் அனைத்துத் தரப்பினரிடையேயும் கல்வி சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை நடத்துவது என முஸ்லிம் இலக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது.
திருச்சி சிங்காரத்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மன்றத்தின் 102 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் .திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை அழைத்து கல்வி விழிப்புணர்வு மாநாட்டை நடத்துவது, எளிமையான கல்வி அனைத்துத் தரப்புக்கும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்  மாநாட்டை நடத்துவது,  முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பில் சிறப்பு மலரை வெளியிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முஸ்லிம் இலக்கிய மன்றத் தலைவர் எம்.கே. முகமது உஸ்மான் சாஹிப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.ஏ. அலீம் முன்னிலை வகித்தார். மன்ற பொதுச் செயலர் கவிஞர் கா. சையது ஜாபர்  மன்றத்தின் செயல்பாடுகளை விளக்கியும், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை எடுத்துரைத்தும் பேசினார். பொருளாளர் ஏ. முகமது ஜலாலுதீன் அக்பர்  வரவு- செலவு அறிக்கையை வெளியிட்டு பேசினார்.
முன்னதாக, மன்றத்தின் நிர்வாகியைத் தேர்வு செய்ய தேர்தலும் நடைபெற்றது. ஒரு பதவிக்கு 6 பேர் போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. துணைச் செயலர் முகமது இக்பால் மற்றும் இதர நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைச் செயலர் சையது ஜாகீர் அசேன் நன்றி கூறினார்.

More from the section

அஞ்சல் ஊழியர்கள் தர்னா
மணல் விலையை ஒழுங்குபடுத்த வலியுறுத்தல்


மாநகர், புறநகர்ப் பகுதிகளில் நவ.17 இல் மின்தடை

மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100 பேர் கைது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு