18 நவம்பர் 2018

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 11th September 2018 09:16 AM

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து  திருச்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், திருச்சியில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. ஜவஹர் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர்கள் திருச்சி தெற்கு கோவிந்தராஜ், திருச்சி வடக்கு கலை முன்னிலை வகித்தனர்.
திமுக மாநகரச் செயலர் மு. அன்பழகன், மதிமுக மாவட்டச் செயலர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, புறநகர் டி.டி.சி. சேரன், மூத்த நிர்வாகிகள் புலவர் முருகேசன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் சரவணன், ஜெயப்பிரகாஷ் மற்றும் இதர நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொமுசவினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 
முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சிலர் நெற்றியில் நாமமிட்டும், கைகளில் திருவோடு ஏந்தியும் நூதன முறையில் போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹேமநாதன் பங்கேற்றார்.
காங்கிரஸ் மகளிர் அணியினர் நூதனம்:  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மகளிரணிப் பொதுச் செயலர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட கட்சியினர் பீமநகர், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள்களில் சென்று, பொதுமக்களிடம் கருத்துகளை எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

More from the section

மாவட்டத்தில் பெரும் பாதிப்பு: மரங்கள், வாழைகள் சாய்ந்தன
ஆட்டோ மீது மரம் விழுந்ததில்  ஓட்டுநர் சாவு
திருச்சி மாவட்டத்தில் 677.30 மி.மீ. மழை பதிவு
கஜா புயல்: நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு 400 துப்புரவுப் பணியாளர்கள் அனுப்பி வைப்பு
1,500 மின் கம்பங்கள் சேதம்