திங்கள்கிழமை 12 நவம்பர் 2018

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கிடையிலான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்

DIN | Published: 11th September 2018 09:16 AM

திருச்சியில் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இடையிலான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
திருச்சி பாத்திமா நகரிலுள்  ரானே பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கேரம், டேபிள், செஸ் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்திலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் பங்கேற்று விளையாடின. ரானே கல்லூரி முதல்வர் ஆர். சசிதரன் தலைமை வகித்து போட்டியைத் தொடக்கி வைத்தார். போட்டிகளின் பெயர், முதல் நான்குஇடங்களைப் பெற்ற கல்லூரிகள் என்ற அடிப்படையில் விவரம்: கேரம்- திருச்சி குண்டூர் எம்.ஐ.இ.டி,  ரானே  பல் தொழில்நுட்பக் கல்லூரி, கொங்குநாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி,  எம்.ஏ.எம். பல்தொழில்நுட்பக் கல்லூரி.
செஸ்:   எம்.ஐ.இ.டி. பல்தொழில்நுட்பக் கல்லூரி,  ரானே,  கரூர் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, கொங்குநாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி.
டேபிள் டென்னிஸ் :  திருச்சி அரியமங்கலம் சேஷசாயி பல்தொழில்நுட்பக் கல்லூரி,  எம்.ஐ.இ.டி, எம்.ஏ.எம் மற்றும் கொங்குநாடுபல்தொழில்நுட்பக் கல்லூரி. வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு  ரானேஹோல்டிங் நிறுவனத்தின் கல்வி முயற்சிகள் பிரிவுத் தலைவர் பி.ராஜலட்சுமி பரிசுகளை வழங்கினார்.
 

More from the section

கோபுரப்பட்டியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
காரில் ஆயுதங்களுடன் வலம் வந்த 7 பேர் கைது
திருப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காதவர்கள் புகார் அளிக்கலாம்
மாநகரின் சில பகுதிகளில் இன்றும்,  நாளையும் குடிநீர் விநியோக ரத்து
குற்றச்செய்திகள்