செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

ஸ்ரீரங்கம் பகுதியில் தற்கொலை  சம்பவங்கள் அதிகரிப்பு

DIN | Published: 11th September 2018 09:16 AM

ஸ்ரீரங்கம் சரக காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 
ஸ்ரீரங்கம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் மட்டும் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
15 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு  சிகிச்சைக்குப்பிறகு வீடு திரும்பியுள்ளனர். 
20 முதல் 35 வயதுப் பிரிவைச் சேர்ந்த இளம் வயதினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஸ்ரீரங்கம் போலீஸார் னர் தெரிவித்துள்ளனர். 
உலக தற்கொலை தடுப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
இதையொட்டி மேற்குறிப்பிட்ட தகவல்கள் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

More from the section

திருச்சியை அழகுபடுத்த 16 புதிய பூங்கா
ரயில் நிலையங்களைப் போன்று தனியார்மயமாகிறது சரக்கு முனையங்கள்!
திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை: 250 கிலோ குட்கா பறிமுதல்; கிடங்கிற்கு சீல்
பெரியார் பிறந்தநாள்: சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன்  கோயிலில் பூச்சொரிதல் விழா