வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, கோவை, திருச்சி கல்லூரி அணிகள்

DIN | Published: 11th September 2018 09:17 AM

திருச்சியில் நடைபெற்று வரும் காஜாமியான் கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல் கல்லூரிகள் தகுதி பெற்றுள்ளன.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி நடத்தும் 18 ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற காஜாமியான் கோப்பைக்கான ஹாக்கி போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 16 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இதில் 8 கல்லூரிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில்,  உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 4-1 என்ற கோல்கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியும், கேரளா கிறிஸ்ட் கல்லூரியை 3-1 என்ற கோல்கணக்கில் சென்னை நாசரேத் கல்லூரியும் வென்றன.
மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியை 4-0 என்ற கோல்கணக்கில் கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி  வென்றது.   மற்றொரு போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியும், கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியும் மோதின.  ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பதால் டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், கோவை என்.ஜி.பி. கல்லூரியை 2-0 என்ற கோல்கணக்கில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி வென்றது. காலிறுதிப் போட்டிகளில் வென்ற திருச்சி ஜமால் முகமது, சென்னை நாசரேத்,  திண்டுக்கல் ஜி.டி.என் மற்றும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடுகின்றன. மாலையில் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நடைபெறுகிறது.
 

More from the section

புத்தனாம்பட்டியில் நவம்பர் 16 மின்தடை
சாலை விபத்தில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 2 ஆக உயர்வு
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை காவல்துறை ஏற்படுத்தும்
பள்ளிகளில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
இருசக்கர வாகன பழுதுபார்ப்போர்  கூட்டமைப்பு அறிமுக விழா