18 நவம்பர் 2018

சாலையோர புளிய மரங்கள்  ஏலத்தில் விற்பனை

DIN | Published: 12th September 2018 08:32 AM

துறையூர் அருகே பகளவாடியில் சாலையோரம் இருந்த 4 புளியமரங்கள் ஏலத்தில் செவ்வாய்க்கிழமை விற்கப்பட்டன.
துறையூர் - திருச்சி சாலையில் பகளவாடி பகுதியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற இடதுபுறம் குறுக்கே உள்ள  4 புளியமரங்களை அகற்றிக் கொள்ள ஏலம் விடப்பட்டது. 20-க்கும் மேற்பட்டோர்  ரூ.1000 செலுத்தி ஏலத்தில் பங்கேற்க முன்பதிவு செய்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகளவாடியில் நடைபெற்ற ஏலத்தில் ராஜேந்திரன் என்பவர் ரூ. 26800க்கு அதிகபட்சமாக ஏலம் கோரினார். இதைத்தொடர்ந்து அவருக்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரங்களை வெட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
 

More from the section

விரைவில் விண்வெளி சார்ந்து புதிய தொழில் கொள்கை
வாழை சேதம்: ரயில் முன் பாய்ந்து  விவசாயி தற்கொலை
லால்குடியில் கோ பூஜை
கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யவில்லை எனக்கூறி மறியல்