புதன்கிழமை 21 நவம்பர் 2018

தகுதிச் சான்றில்லாத 2 சுமை ஆட்டோக்கள் பறிமுதல்

DIN | Published: 12th September 2018 08:33 AM

துறையூர் வழியாக தர தகுதிச் சான்று இன்றி இயக்கப்பட்ட 2 சுமை ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தார்.
ஸ்ரீரங்கம் வட்டார மோட்டார் வாகன அலுவலர் காளியப்பன் உத்தரவின் பேரில் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் வி. செல்வக்குமார் துறையூர் பகுதியில் வாகனத் தணிக்கை செய்தார். துறையூர் சத்யா நாராயணா சிட்டி அருகே உப்பிலியபுரத்தில் இருந்து துறையூருக்கு தேங்காய் ஏற்றிச்சென்ற சுமை ஆட்டோ, துறையூரிலிருந்து ஆத்தூருக்கு மரம் ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோக்கள் உரிய தகுதி தரச்சான்று இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது. 
இதையடுத்து, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கண்ணனூர் பகுதியில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ. 14500 அபராதம் விதித்தார். இதேபோல், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்றவர்கள், பின்னால் அமர்ந்து சென்ற 2 பேர் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ. 1500 அபராதம் வசூலிக்கப்பட்டது.


 

More from the section

மணப்பாறையில் 8  இடங்களில் மக்கள் மறியல்: மின்வசதி, குடிநீரின்றி தவிப்பு
துறையூர் சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
திருச்சியில் மீண்டும் மழை
திருமண வீட்டில் பூட்டை உடைத்து 63 பவுன் நகைகள் திருட்டு
பள்ளி மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ரத்து: மண்டல துணை இயக்குநர் தகவல்