புதன்கிழமை 21 நவம்பர் 2018

தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்க அழைப்பு

DIN | Published: 12th September 2018 08:30 AM

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ள தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாமில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறுதொழில்கள் சங்கத்தின் செயலர் எஸ். புண்ணியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் இணைந்து நடத்தும் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்  புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கும் மேற்பட்ட, தொழில்துறையில் ஆர்வமிக்க மற்றும் ஏதேனும் தொழிலில் அடிப்படை பயிற்சி பெற்ற ஆண், பெண் இந்த முகாமில் பங்கேற்கலாம். 
தொழில்முனைவோருக்கு தொழில்வணிகவடிவம்மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிதியுதவி பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் மானியத் திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன் மூலம் நிதியுதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு  0431- 2440119, 2440114, 9659558111, 9443733016 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

More from the section


"சபரிமலையில் பக்தர்கள் மீது தொடரும்  மனித உரிமை மீறல்கள்'


செங்காட்டுப்பட்டி பள்ளியில் பரிசளிப்பு விழா

திருவெறும்பூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் நவ.27,29 ஆம் தேதிகளில்  திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்
கொப்பம்பட்டி, முருங்கப்பட்டி பகுதிகளில் நவம்பர் 22 மின்தடை
ஏ.டி.எம். மையத்தில் கேமராக்கள் திருட்டு: இருவர் கைது