புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

பள்ளியில் ஓசோன் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN | Published: 12th September 2018 08:34 AM

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி ஆய்வுத் துறை சார்பில் நடத்தப்பட்ட  நிகழ்வுக்கு அரசங்குடி மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் தென்னலேசுவரன் தலைமை வகித்தார். வாய்ஸ் அறக்கட்டளை இயக்குநர்  ஏ.கிரகோரி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். இதில், பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன்,  பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணித் துறை உதவிப் பேராசிரியர் இ. எட்வின்  பிராங்கிளின் சாமுவேல், மூன்றாமாண்டு மாணவர் ஜாக்கோப்  டார்வின் உள்ளிட்டோர் பேசினர். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

More from the section

கொள்ளிடத்தில் மணல் அள்ளுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் :  உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
எச்.ஐ.வி.  குழந்தைகளுடன் கலந்துரையாடல்
மணவை தமிழ்மன்ற இலக்கியச் சந்திப்பு