செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

மக்களவை துணைத் தலைவரிடம் பொதுமக்கள் மனு அளிப்பு

DIN | Published: 12th September 2018 08:31 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில்  மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை செவ்வாய்க்கிழமை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றார். 
மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வையம்பட்டி ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, அமயபுரம், நல்லாம்பிள்ளை, அணியாப்பூர், வெள்ளாளப்பட்டி, தவளைவீரன்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று 
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளருமான டி. ரத்தினவேல், ஆட்சியர் கு. ராசாமணி, அதிமுக வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் என்.சேது ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

முத்திரைக் கொல்லர் பணி: எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...
மணப்பாறையில் நேரிட்ட தீவிபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்
தீயணைப்பு அதிகாரியை கடித்த 12 அடி நீள மலைப்பாம்பு
ஜேசிபி வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
காவிரி ஆற்று தண்ணீரும், மணலும் தமிழ்த் தலைமுறைக்கு சொந்தம்