திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை: 250 கிலோ குட்கா பறிமுதல்; கிடங்கிற்கு சீல்

திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 250 கிலோ குட்கா

திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 250 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள், கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. 
திருச்சியில் போதைப் பொருள்கள் மட்டுமின்றி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றன. இதையடுத்து, திருச்சி மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சித்ரா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை அதிகாலை முதல் சிந்தாமணி பகுதியில் முகாமிட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவர் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி நடுகுஜிலி தெருவில் உள்ள கிடங்கிலிருந்து எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட கிடங்கில் சோதனையிட்டதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ எடை கொண்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், புகையிலைப் பொருள்கள் இருந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.   புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்து வந்த பிரகாஷ்(45) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள தேநீர் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ரசாயனம் கலந்த 50 கிலோ டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com