பெல் நிறுவனத்தில் அவசரகால தீயணைப்பு ஒத்திகை

திருச்சி பெல் நிறுவனத்தில்  அவசரகால தீயணைப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

திருச்சி பெல் நிறுவனத்தில்  அவசரகால தீயணைப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
பெல் நிறுவனத்தின்  உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு -2 இல் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை, இணைப்பில்லா எஃகு குழாய் ஆலையிலுள்ள தலா 50 டன் கொள்ளவு கொண்ட  இரண்டு திரவ எரிவாயுக் கலங்களில் நிகழும் விபத்தை உருவகப்படுத்தி நடத்தப்பட்டது.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இயக்குநரகத்தின் இணை இயக்குநர் ஏ.ரவி, உதவி இயக்குநர் எஸ். மகேசுவரன், திருச்சி படைக்கலத் தொழிற்சாலை, இந்திய எண்ணெய்க் கழகம்,  கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, விமான நிலைய ஆணையம் ஆகியவற்றின் பார்வையாளர்கள் முன்னிலையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
பெல் திருச்சி பிரிவில் திரவ எரிவாயு சேகரிப்பானது வெடிப்பொருள்கள் இயக்ககத்தின் கடுமையான நெறிமுறைகளுக்கு இணங்க அனைத்து தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்கானத் தர நிர்ணயங்களின்படி இயக்கப்பட்டு வருகிறது என்றார் பெல் நிறுவனத்தின் கள அலுவலர் மற்றும் உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு-2 இன் பொது மேலாளர் பி.ரகுராமன்.
இந்த ஒத்திகையின் அவதானிப்புகள் மற்றும் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு வருங்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில்  மேம்பாடு கொண்டுவரப்படும் என்றார் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான கூடுதல் பொது மேலாளர் ஈ. திருமாவளவன்.
பரஸ்பர ஒத்துழைப்புத் திட்ட்ததின் கீழ் இயங்கும் படைக்கலத் தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை,  விமான நிலையம் மற்றும் இந்திய எண்ணெய்க் கழகம் ஆகியவற்றின் தீயணைப்புக் குழுக்கள் பெல் நிறுவனத் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com