தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

திருச்சி பெல் நிறுவனம் சார்பில் தூய்மையை வலியுறுத்தி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது.


திருச்சி பெல் நிறுவனம் சார்பில் தூய்மையை வலியுறுத்தி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
திருச்சி காட்டூரிலுள்ள பரமஹம்சா பெல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், டிஜிட்டல் மாறுதலுக்கான குழுவின் பொது மேலாளர் ஏ. மருதமுத்து தூய்மை உறுதிமொழியை ஏற்புவித்து பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தார். தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பெல் பொது மேலாளர் ( மூலோபாயம் மற்றும் செயல்பாடுகள் மேலாண்மைத்துறை) கே. கணேசனும், கோவிலடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பொது மேலாளர் ( பொறியியல் துறை) பி. பாலசுப்பிரமணியமும் பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்துப் பேசினர். தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பேரணியில் ஏந்திச் சென்ற மாணவ, மாணவிகள், விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியைத் தொடர்ந்து, ஓவியம்வரைதல், தெரு நாடகம் நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com