புரட்டாசி: ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசித்தனர்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசித்தனர்.
பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை விரதமிருந்து வழிபடுவர்.நிகழாண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். வரும் 29-ஆம் தேதி 2 ஆவது சனிக்கிழமையும், அக். 6-ல் 3-ஆவது சனிக்கிழமையும்,13-ல் 4-ஆவது சனிக்கிழமையும் வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெருமாள்மலையில் சிறப்பு வழிபாடு: துறையூர் பெருமாள்மலை கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி பெருமாள்மலை மீதுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடாசலபதி கோயிலில் மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கருப்பண்ணர் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கும் சேர்த்து மகாதீபாரதனையும் நடைபெற்றது.
காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை துறையூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை விரதமிருந்து படிக்கட்டுகளில் ஏறிச்சென்றும், சுற்றுலா வேன்களிலும் சென்றும் வரிசையில் நின்று சுவாமி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com