ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 5 அணையா விளக்குகள்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் 5 அணையா விளக்குகளை காணிக்கையாக வழங்கினார்.


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் 5 அணையா விளக்குகளை காணிக்கையாக வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோயில்களில் உள்ள அணையா விளக்கில் நெய், எண்ணெய்யை ஊற்றி வழிபட்டுச் செல்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 2 லட்சத்தில் 5 புதிய அணையா விளக்குகளை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். அழகிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அணையா விளக்கு குறித்து ஸ்தபதி ஆர்.டி .செல்வராஜ் கூறுகையில், 5 புதிய அணையா விளக்குகள் பித்தளையால் செய்யப்பட்டவை. ஒவ்வொரு விளக்கும் நாலரை அடி உயரமும், 2 அடி அகலமும் ,40 கிலோ எடையும் கொண்டது. கீழ்பகுதி சதுர வடிவிலும், விளக்கின் முன்பக்கத்தில் எந்த சன்னதியில் வைக்கப்படுகிறதோ அந்த சுவாமியின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற 3 பக்கங்களிலும் சங்கு, சக்கரம், பத்மப்பூ பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளக்கின் மேல் பகுதியில் தாமரைப்பூ வடிவிலும், அதன் உச்சியில் சங்கு, சங்கரம் இடம் பெற்றுள்ளது. அணையா விளக்குகள் ரெங்கநாதர் சன்னதியின் தங்கக் கொடிமரத்தின் கீழும், தாயார் சன்னதி, கருடாழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ரெங்கவிலாச மண்டபத்தின் கல் கொடி மரத்தின் கீழும் வைக்கப்பட்டுள்ளன என்றார். இந்த புதிய அணையா விளக்குகளில் புராட்டாசி சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் எண்ணெய், நெய் ஊற்றி வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com