திருச்சி

குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு

DIN

குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு  இளங்குழந்தை பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
திருச்சியில் இக்கூட்டமைப்பின் சார்பில்  2019 மக்களவைத் தேர்தலில் குழந்தைகள் உரிமைக்கான மாநிலப் பிரசாரம் மற்றும் தயாரிப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில அமைப்பாளர் க. சண்முகவேலாயுதம் பேசியது:
தமிழகத்தில்தான் மொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 30.47 சதவிகிதமாக உள்ளது. இதுபோல, 1,647 என்ற எண்ணிக்கையில் அதிகளவு குழந்தைகள் காப்பகங்களும் உள்ளன.  
 மேலும், தமிழகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் குறைந்து வருகிறது. 54.7 சதவிகித பெண்கள் மட்டுமே பிறந்த ஒரு மணிநேரத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் நிலையில் உள்ளனர். 
 6 மாதம் வரை முழுமையாக தாய்ப்பால் வழங்கும் பெண்களின் எண்ணிக்கை 48.3 சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்குப் பிறகு இணை உணவுடன் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 21.4 சதவிகிதமாகவும்  உள்ளது. 
இதுமட்டுமின்றி பல்வேறு நிலைகளில் குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆரம்பக் கல்வி தொடங்கி உடல் ஆரோக்கியம் வரையில் பல்வேறு நிலைகளில் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.
தமிழ்நாடு மாநிலக்  குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2018 மார்ச் வரை 1,437 குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத்  திட்டமிட்டுள்ளோம். தேர்தல் அறிக்கையும் தயாரித்துள்ளோம். 
அறிக்கையில் இடம்பெற்றுள்ள  பிரதான கோரிக்கைகள்:  18 வயது வரை அனைவரும் குழந்தைகள் எனக் கருதி அதற்கேற்ப குழந்தைகளுக்கான சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். அங்கன்வாடி சேவைத் திட்டத்தை சமுதாய பங்கேற்புடன் பலப்படுத்த வேண்டும். 
குறைந்து வரும் பாலின விகிதத்தை தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான நலவாழ்வை அடிப்படை உரிமையாக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 
தேசியக்  குழந்தைப் பாதுகாப்பு கொள்கையை ஏற்படுத்தி, குழந்தைகளுக்குத்  தனியே தகவல் தளம் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் அன்றாட நிலை கண்காணிக்கப்பட வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், புதுவையில் உளள 40 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளப்படும். 
வாகனப் பிரசாரம், அரங்கக் கூட்டம், கலை நிகழ்ச்சிகள் என்ற அடிப்படையில் பிரசார யுத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இக் கூட்டத்தில், கூட்டமைப்பின் மத்திய மண்டல அமைப்பாளர் மருதநாயகம், மாவட்ட அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு, அப்துல்நாசர், ஜெகதீசன், சௌந்தரராஜன், ராம. பெருமாள், வேளாங்கண்ணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT