திருமண உதவி திட்டங்கள்: திருச்சிக்கு ரூ.23.24 கோடி ஒதுக்கீடு

திருமண உதவி திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டு (2018-19) ரூ.23.24 கோடி ஒதுக்கீடு

திருமண உதவி திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டு (2018-19) ரூ.23.24 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலத்துறை மூலம், பெண் கல்வியை ஊக்குவிக்கவும், ஏழை, எளிய, நடுத்த பெண்களுக்கு திருமண உதவி வழங்கும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற பெண் நிதியுதவி திட்டம், தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம், மணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம் ஆகியவற்றின் மூலம் திருமணப் பெண்ணின் தாலிக்கு தங்கம் 8 கிராம் மற்றும் அவரவர் தகுதிக்கேற்ப ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத் திட்டங்களின் கீழ், திருச்சி மாவட்டத்துக்கு 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ரூ.146.45 கோடி நிதி ஒதுக்கப்பட்ட தங்கம் மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.25.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4,160 பயனாளிகள் பயன்பெற்றனர். இதன் தொடர்ச்சியாக 2018-19ஆம் நிதியாண்டுக்கு 3,700 பயனாளிகளுக்கு ரூ.23 கோடியே 24 லட்சத்து 18 ஆயிரத்து 600 ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து 1,578 பட்டதாரி அல்லாத பயனாளிகள், 2,122 பட்டதாரி பயனாளிகள் என மொத்தம் 3,700 பேருக்கு தாலிக்கு 8 கிராம் தங்கமும் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com