மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 13 பேர் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 13 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 13 பேர் காயமடைந்தனர்.
சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புனித சவேரியார் ஆலயத் திருவிழாவையொட்டி, பாஸ்கா திடலில்  நடைபெற்ற ஜல்லிக்கட்டை  மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி  முடிந்து, புனிதநீர் தெளிக்கப்பட்டு ஊர்வலமாக வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 619 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. 340 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த  சில காளைகள் நின்று விளையாடின. சில காளைகள் வீரர்கள் தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவிற்குச் சென்றன. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலைப் பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கியவர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு  இருசக்கர வாகனம், சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் 8 மாடுபிடி வீரர்கள், 5 மாடுகளின் உரிமையாளர்கள் காயமடைந்து முகாமில் சிகிச்சை பெற்றனர்.  ஜல்லிக்கட்டில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்,  ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) சிவசுப்பிரமணியன் தலைமையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com