திருச்சி

ம.நீ.ம தலைமையில் 3-ஆவது அணி: கமல்ஹாசன் நம்பிக்கை

DIN

மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3ஆவது அணி அமையவும் வாய்ப்பு உள்ளது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யதின் ஓராண்டு விழாவை முன்னிட்டு, நாகப்பட்டினம், திருவாரூரில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க வியாழக்கிழமை விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தனித்து போட்டியிடும். தனித்து நிற்பதற்கான காரணங்களை ஏற்கெனவே கூறிவிட்டேன். கட்சியின் கொள்கை என்னவென்று திரும்பத்திரும்ப கேள்வி எழுப்பப்படுகிறது. மக்கள் நலன் ஒன்று மட்டுமே கட்சியின் கொள்கை என சுருக்கமாகச் சொன்னது யாருக்கும் தெரியவில்லை. மக்கள் நலன் என்ற ஒற்றை வரியில் அனைத்து கொள்கைகளும் வந்துவிடும்.
கட்சியின் கொள்கை தொடர்பாக புத்தக வடிவில் பக்கம்பக்கமாக அச்சிட்டு வெளியிட்டவர்கள் எல்லாம் அதனை கீழே வீசி மிதித்துவிட்டு, கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் கூட்டணிக்காக சேர்ந்துள்ளனர். திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் எங்களுடன் வரலாம் என அறிவித்திருந்தேன். எங்களை முழுமையாக சுய பரிசோதனை செய்து கொண்டு, எங்களுடைய தகுதியை முடிவு செய்த பிறகே அறிவித்தோம். இதேபோல, எங்களுடன் வரும் கட்சிகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு வர வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டாகிறது. மாவட்டங்களில் தேர்வு செய்த கிராமங்களை தத்தெடுத்துள்ளோம். இதனடிப்படையில் படிப்படியாக பணிகளை செய்யத் தொடங்கியுள்ளோம். மாய வித்தை காட்டுகிறோம் என்றோ, மயக்க வார்த்தை கூறுவதோ கிடையாது. எது இயலுமோ அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் காலை முன்னெடுத்து வைத் நம்பிதுள்ளோம். 
மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருக்கலாம். இப்போது தெரியாது. மக்கள் நலன் என்ற கொள்கையுள்ள கட்சிகள் வர வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி இலக்கை கூற வேண்டியது மக்கள்தான். 
பிப்.24 முதல் எங்களது கட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும் பணியை தொடங்கவுள்ளோம். 
வேட்பாளர் தேர்வில் தகுதி முக்கியம். குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படும். யூகங்கள் குறித்து இப்போது அறிவிக்க முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT