காணும் பொங்கல்: முக்கொம்பில் குவிந்த மக்கள் கூட்டம்!

காணும் பொங்கலையொட்டி திருச்சி மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான முக்கொம்பில் வியாழக்கிழமை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

காணும் பொங்கலையொட்டி திருச்சி மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான முக்கொம்பில் வியாழக்கிழமை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
திருச்சி- கரூர் நெடுஞ்சாலையிலுள்ள முக்கொம்பு சுற்றுலாத் தலம், காவிரியாற்றை காவிரியாகவும், கொள்ளிடமாகவும் இரண்டாகப் பிரிக்கும் கொம்புப் பகுதியாகும். இயற்கையாக உருவாகியிருக்கும் இந்தப் பகுதியில் காவிரியாற்றின் இரு கரைகளிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி மாவட்டத்துக்குள் காவிரியில் கட்டப்பட்ட தடுப்பணையான மேலணை ஆற்றைக் கடக்க உதவுகிறது.
காணும் பொங்கலையொட்டி இங்கு குவிந்த மக்கள், காவிரி ஆற்றில் குளித்தும், பூங்காக்களில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சீசா, ராட்டினங்கள், டிராகன் ரயில், தண்ணீர் விளையாட்டுகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என பாரபட்சமின்றி அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர்.
முக்கொம்பு சுற்றுலா மையத்திலுள்ள கீழணை மற்றும் மேலணை பகுதிகளில் உள்ள சிறுவர் பூங்கா, ஊஞ்சல் பகுதி, அறிவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம்அதிகளவில் காணப்பட்டது. சுற்றுலா மையத்திலுள்ள ஊஞ்சல்கள், ராட்டினங்கள், சிறுவர் ரயில் போன்றவற்றில் குழந்தைகளின் கூட்டம் அதிகமிருந்தது. திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோனர் வந்திருந்தனர். கீழணை பகுதியிலும் மக்கள் குளித்து மகிழந்தனர்.
இதேபோல, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, வயலூர் போன்ற கோயில்களிலும் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் திரண்டிருந்தனர். திரையரங்குகளிலும் கடந்த சில நாள்களைவிடவும்  கூட்டம் நிரம்பி வழிந்ததும் குறிப்பிடத்தக்கது. காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் போலீஸார் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கம்பரசம்பேட்டையிலும் மக்கள் கூட்டம்: தற்போது மாநகர மக்களின் பொழுதுபோக்குமிடமாக மாறி வரும் கம்பரசம்பேட்டை தடுப்பணைப் பகுதியிலும் காலையிலிருந்த மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. சிறுவர்கள், இளைஞர்கள்  தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com