சுற்றுலா பொங்கல் விழா

திருச்சி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து முக்கொம்பில் சுற்றுலா பொங்கல் விழாவை வியாழக்கிழமை கொண்டாடின.

திருச்சி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து முக்கொம்பில் சுற்றுலா பொங்கல் விழாவை வியாழக்கிழமை கொண்டாடின.
இந்த விழாவை தொடக்கி வைத்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி கூறியது: திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான முக்கொம்பில் சுற்றுலா பொங்கல் விழா கொண்டாடப்படுவது பெருமைக்குரியது. திருச்சியில் முக்கொம்பு மட்டுமல்லாது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், புளியஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் காணும் பொங்கலுக்கான ஏற்பாடுகளை பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து செய்துள்ளனர் என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ஜி. சிவக்குமார், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கனகமாணிக்கம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் புகழேந்தி, ராஜரத்தினம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட செயலர் அயிலை சிவ. சூரியன் ஆகியோர் பொதுமக்களுடன் பொங்கலிட்டு வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தளபதி தப்பாட்டக் குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. தப்பாட்டம் ஆடியபடியே தரையில் வைக்கப்பட்ட பணத்தாள்களை விழி இமைகளை கொண்டே எடுத்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com