திருச்சி மாவட்டத்தில் 7.75 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 7.75 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.87.39 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது


திருச்சி மாவட்டத்தில் உள்ள 7.75 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.87.39 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து திருச்சி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் ரூ.ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில், கிழக்கு வட்டத்தில் 1.09 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள், மேற்கு வட்டத்தில் 83 ஆயிரத்து 813 குடும்ப அட்டைதாரர்கள், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 91 ஆயிரத்து 206 குடும்ப அட்டைதாரர்கள், லால்குடி வட்டத்தில் 78,701 பேர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 57,432 பேர், மருங்காபுரி வட்டத்தில் 35,054 பேர், முசிறி வட்டத்தில் 67,804 பேர், திருவெறும்பூர் வட்டத்தில் 62,574 பேர், தொட்டியம் வட்டத்தில் 41,455 பேர், துறையூர் வட்டத்தில் 82,009 பேர் என மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 701 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.87.39 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, 6 லட்சத்து 19 ஆயிரத்து 680 சேலைகளும், 6 லட்சத்து 17 ஆயிரத்து 344 வேட்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த அனைத்து வகை பொங்கல் பரிசுகளும் தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com