பணியிட மாறுதலுக்கான தடையை நீக்க டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணியிட மாறுதலுக்கு நீதிமன்றம் வித்துள்ள தடையை நீக்க வேண்டும் என திருச்சியில்


தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணியிட மாறுதலுக்கு நீதிமன்றம் வித்துள்ள தடையை நீக்க வேண்டும் என திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாநில செயல் தலைவர் கு. சரவணன் தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். சங்க மாநில துணை செயலாளர் பி. முருகானந்தம், பொதுச்செயலாளர்கள் எம். கோதண்டம், ஆர். கோபிநாத், மாநில தலைவர் கு. பால்பாண்டியன், பொருளாளர் ச. சாகுல் அமீது அரசுப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதில், மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வசூல் பணம் ரூ. 1.77 லட்சத்தை பறிகொடுத்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சுமார் 27,000 பேர் பணியாற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பணியிட மாறுதலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடைஆணையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com