சாலையில் திரிந்த 60 மாடுகள் கொட்டிலில் அடைப்பு

திருச்சி மாநகரச் சாலைகளில் கேட்பாரற்று திரிந்த 60 மாடுகள் ஞாயிற்றுக்கிழமை பிடிக்கப்பட்டு, கால்நடை கொட்டிலில் அடைக்கப்பட்டன.

திருச்சி மாநகரச் சாலைகளில் கேட்பாரற்று திரிந்த 60 மாடுகள் ஞாயிற்றுக்கிழமை பிடிக்கப்பட்டு, கால்நடை கொட்டிலில் அடைக்கப்பட்டன.
மாநகராட்சியின் 4 கோட்டங்களுக்குள்பட்ட  மக்கள் நடமாட்டம் மிகுந்த பள்ளிகள், போக்குவரத்து  நெரிசல் மிகுந்த சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிதல், கூட்டமாக அமர்ந்திருத்தல் போன்றவற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து வந்த புகார்களை தொடர்ந்து, மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதன்பேரில், கோ.அபிஷேகபுரம்  கோட்டஉதவி ஆணையர் பிரபாகர் தலைமையில், இக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வயலூர் சாலை, சீனிவாச நகர், புத்தூர் பிரதான சாலை,  உள்ளிட்ட பகுதிகளில் கேட்பாரற்று திரிந்த 60 மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் கால்நடை கொட்டிலில் அடைக்கப்பட்டன. இதுகுறித்து, ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது:  ஆடுகள், மாடுகள், குதிரைகள், உள்ளிட்டவற்றை வளர்க்க பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்துக்குள்பட்டு உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமலோ, பாதுகாப்பு வசதிகள் இல்லாமலோ பொது இடங்களில் கால்நடைகளைத் திரிய விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 
இப்போது, மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்ட மாடுகளை அதன் உரிமையாளர்கள் 3 தினங்களுக்குள் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாடுகள் அனைத்தும் மாநகராட்சி மூலம் பொதுஏலம் விடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com