மக்களின் ஆரவாரமே திமுகவின் வெற்றிக்கு அடையாளம்

மக்களின் ஆரவாரமே திமுகவின் வெற்றிக்கு அடையாளம் என முசிறியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களின் ஆரவாரமே திமுகவின் வெற்றிக்கு அடையாளம்

மக்களின் ஆரவாரமே திமுகவின் வெற்றிக்கு அடையாளம் என முசிறியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
முசிறி கைகாட்டியில் வியாழக்கிழமை இரவு திமுக தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:  கருணாநிதி பிறந்த திருவாரூரில் மார்ச் 20ஆம் தேதி பிரசார கூட்டத்தை தொடங்கி அவர் வளர்ந்த தஞ்சாவூரில் நிறைவு செய்து,  முதலில் அவர் தேர்தல் களம் கண்ட தொகுதியான குளித்தலை வழியாக முசிறிக்கு இரண்டாவது நாளாக வந்துள்ளேன்.  முசிறிக்கு வரும்போது  குளித்தலை - முசிறியை இணைக்கும் தந்தை பெரியார் காவிரி பாலத்தை கடந்து வந்தேன். இந்த  பாலம் எனது  தந்தை ஆட்சியில் இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு, 1972 -இல் எம்ஜிஆரால் திறக்கப்பட்டது.  திருவாரூர், தஞ்சையில் நடந்த கூட்டத்தில் மக்களிடம் முக மலர்ச்சி இருந்தது போல முசிறி மக்களும் முக மலர்ச்சியுடன் ஆரவாரம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதான் திமுகவின் பெரும் வெற்றிக்கு அடையாளம். 
மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடப்பாடி அரசும் மக்களை பற்றி கவலை கொள்ளாதவர்கள்.  மோடி தனது பதவிக்காக எதையும் செய்வார். எடப்பாடி பற்றி சொல்லத் தேவையில்லை. 7 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் பாலியல் சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு ஆளும் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டை பெற்று தந்தோம் என்றவர்கள் நீட்தேர்வுக்கு ஏன் விலக்கு பெறவில்லை.  மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சிகள் உருவாகப் போகிறது. திமுக ஆட்சிக்கு  வந்தவுடன்  பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி  கண்டிப்பாக அமைக்கப்படும். புளியஞ்சோலையில் வரும் உபரி நீரை தடுத்து தா.பேட்டை, மேட்டுப்பாளையம், உப்பிலியபுரம் பகுதிக்கு கூட்டுக் குடிநீர் வழங்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் பாலியல் சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து கொடூரக்காரர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றார்.
முன்னதாக ஐ.ஜே.கே. தலைவரும் வேட்பாளருமான பாரிவேந்தர் பேசுகையில், கடந்த தேர்தலில் ஏதோ ஒரு மாயை நோக்கி சென்றுவிட்டேன். 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்கள் பெற்ற துயரங்களை அறிந்து இன்று திமுக கூட்டணியில் வந்து சேர்ந்துள்ளேன். கூட்டணியினர் ஒத்துழைப்பு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com