விபத்தை தவிர்க்க சாலை விதிகளை கடைப்பிடித்தல் அவசியம்: ஆட்சியர்

விபத்தினை தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

விபத்தினை தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்துப் பேசியதாவது:
 கடலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும்.
 பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் பிரதிபலிப்பான் தெரியும் அளவுக்கு இருக்கவேண்டும். சாலை வளைவுகளில் காவல்துறையினர் தடுப்புக் கம்பிகள் வைத்து வாகனங்களின் வேகத்தைக் குறைத்து செல்லும் அளவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 மேலும், பொதுமக்கள் சாலையைக் கடக்கும்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் வராமல் இருப்பதை உறுதி செய்த பிறகு சாலையைக் கடந்தால் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
 ஆட்டோக்களில் கூடுதலாக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். சாலை விதிகளை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முழுமையாக கடைப்பிடித்தாலே அதிக விபத்துகள் நேரிடாமலும், உயிரிழப்புகள் ஏற்படாமலும் தவிர்க்க முடியும் என்றார்.
 கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன், வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சார்- ஆட்சியர்கள் கே.எம்.சரயூ, எம்.எஸ்.பிரசாந்த், கலால் உதவி ஆணையர் நடராஜன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம், நகராட்சி ஆணையர்கள், வட்டாட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com