கடலூர்

போக்குவரத்து விதி கடைப்பிடிப்பு: புதுமண தம்பதிக்கு போலீஸார் பரிசளிப்பு

DIN

சாலை விதியைக் கடைப்பிடித்த புதுமண தம்பதிக்கு கடலூர் காவல் துறையினர் நூலைப் பரிசளித்து வாழ்த்தினர்.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பிரிவு காவலர்கள் நகர அரங்கம் அருகே உள்ள ரவுண்டானாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்தவர்களை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் த.சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் நிறுத்தி அறிவுரை கூறிக் கொண்டிருந்தனர். அப்போது, கழுத்தில் மாலையுடன் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்தவரைக் கண்ட போலீஸார் காரை நிறுத்தினர். 
திருமணம் முடிந்த தம்பதி கழுத்தில் மாலையுடன் சீட் பெல்ட அணிந்து காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, தம்பதிக்கு திருக்குறள் நூலைப் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையினால் புதுமணத் தம்பதி மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT