மரக் கன்றுகள் நடும் விழா

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வி.செல்வநாராயணன் தலைமை வகித்தார்.  தலைமையாசிரியர் கே.செல்வக்குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ். அருள்மொழிச்செல்வன் மரக் கன்று நட்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்.  விழாவில் ரோட்டரி சங்கச் செயலர் ஆர்.ராஜசேகரன், முன்னாள் துணை ஆளுநர் கே.ஜி.நடராஜன், உறுப்பினர்கள் என்.என். பாபு, சி.சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியில், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் நடுவதற்கு பள்ளியின் தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர் படை, இளம்செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் சுமார் 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.  
ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியர் ஆர்.ரவிசங்கர், தேசிய பசுமைப் படை அமைப்பாளர் எஸ்.இளங்கோ, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஜெ.ஜெயராமன், சாரணர் அமைப்பு அதி காரி என்.வேலாயுதம், இளம் செஞ்சிலுவை சங்க அதிகாரி என்.ரத்தின சபாபதி, ஆசிரியர் ஜனார்த்தனன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com