என்எல்சி சுரங்கத்தில் பாதுகாப்பு பணிகள்

கஜா புயல் காரணமாக, நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை பாதுகாக்கும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் தீவிரம் காட்டியுள்ளது.

கஜா புயல் காரணமாக, நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை பாதுகாக்கும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் தீவிரம் காட்டியுள்ளது.
 இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 2.85 கோடி டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த 3 சுரங்கங்களும் திறந்த வெளி சுரங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 தற்போது, வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் கடலூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெருமழையின் காரணமாக சுரங்கங்களில் மழை நீர் புகாத வண்ணம் பாதுகாக்கும் வகையிலும், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கத்தின் உள் மற்றும் வெளியே உள்ள வாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி உள்ளதாம். மேலும், நகர நிர்வாகத்தின் மூலம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
 மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com