கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்கக் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை, பேரிடர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை விடுத்தது.
பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டம், புவனகிரி அருகே தம்பிக்குநல்லான்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத் தலைவர் காமராசு தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டச் செயலர் வீரவன்னியவேங்கன் வரவேற்றார். டெல்டா விஜயன், திருமலைராஜன், மூங்கிலடி ரவீந்திரன், அரங்க.பாஸ்கர், கடலூர் ராஜேந்திரன், தியாகவல்லி தனசேகரன், அழகு.செல்வமணி, சந்தோஷ்குமார், பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை நிறுவன பொதுச் செயலர் வீரவன்னியராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடனை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசிடம் இழப்பீடு பெற குழு அமைத்து பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநில இளைஞரணித் தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com