குறிஞ்சிப்பாடி பகுதியில் சார்-ஆட்சியர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் வரும் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை சார்-ஆட்சியர் சரயூ செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் வரும் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை சார்-ஆட்சியர் சரயூ செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 அதன்படி, கொளக்குடி மேல் பரவனாற்றின் இடதுகரை முழுவதும் 4-ஆவது நாளாக, 3 அடி உயரத்துக்கு கரை பலப்படுத்தப்படும் பணி, புவனகிரி வட்டம், துரிஞ்சிக்கொள்ளை மதுரா, மதுவானமேடு, கரிவெட்டி, சூடாமணி ஏரிகளின் வலது, இடது பக்கக் கரைகளில் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் கரை பலப்படுத்தும் பணி, வடலூர் அருகே உள்ள ராஜாக்குப்பம் மதுரா, ஆண்டிக்குப்பம் கிராமத்தில் அய்யன் ஏரியில் இருந்து செங்கால் ஓடைக்கு செல்லும் வடிகால் வாய்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, மேலப்புதுப்பேட்டை ஏரியின் தெற்குக் கரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கும் பணி, கல்குணம் கிராமத்தில் செங்கால் ஒடை கரையை பலப்படுத்தும் பணி ஆகியவற்றை சார்-ஆட்சியர் சரயூ, வட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com